ECONOMYPBTSELANGOR

நாடி திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகர்களுக்கு மூலதன உதவி- சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், நவ 30- நாடி எனப்படும் டாருள் ஏசான் வர்த்தக திட்டத்தின் வாயிலாக சிறு அளவில் வியாபாரம் செய்வோருக்கு மூலதன உதவி செய்ய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வேலை இழந்தவர்கள் வியாபாரத்தில் கால் பதிப்பதற்கு ஏதுவாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வியாபாரத்தில் ஈடுபட பலர் ஆசைப்படுகின்றனர். ஆனால், அவர்களிடம் மூலதனம் இல்லை. ஆகவே நாம் குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு மூலதனமாக வழங்குவதோடு வர்த்தகம் தொடர்பான வழிகாட்டுதலையும் வழங்குகிறோம் என்றார் அவர்.

மெலிண்டோ ஏர் விமான நிறுவனத்தின் 30 விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் குறித்து மாநில அரசு விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது மக்களுக்கும் வர்த்தக தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைப்பதற்கான நடவடிக்கையில் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது நாடி திட்டம் தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டார்.

வியாபாரத்தில் ஈடுபட ஆர்வமும் தகுதியும் கொண்டவர்களுக்கு 1,000 வெள்ளி முதல் 3,000 வெள்ளி வரை இந்த நாடி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டும்


Pengarang :