ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு-மந்திரி புசார் தகவல்

நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு-மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், நவ 30- நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு இவ்வாண்டில் தீர்வு காணப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நீரில் துர்நாற்றம் கலந்த எட்டு தூய்மைக்கேட்டுச் சம்பவங்களை தவிர்க்க இயலாத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

துர்நாற்றத்தை கண்டறியும் தொழில் நுட்பம் கைவசம் இல்லாததே இதற்கு காரணம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நீரில் கலந்துள்ள துர்நாற்றத்தை முகர்ந்து பார்ப்பதன் மூலமாக மட்டுமே கண்டறியும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுவே நமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

நீர் சுத்திகரிப்பு மையத்தை மூடும் சாத்தியம் கொண்ட 21 நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் இவ்வாண்டு அடையாளம் காணப்பட்டாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை 60 விழுக்காட்டு நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தீர்வு கண்டுள்ளதாக பொது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறியிருந்தார்.


Pengarang :