dav
ECONOMYNATIONALSELANGOR

பள்ளி பேருந்து நடத்துநர்களுக்கு உதவ சிறப்புத் திட்டத்தை வரைவீர்- மத்திய அரசுக்கு ஜோர்ஜ் குணராஜ் வலியுறுத்து

ஷா ஆலம், நவ 26- கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்ட பள்ளி பேருந்து நடத்துநர்களுக்கு உதவும் வகையில்
சிறப்புத் திட்டத்தை வரையும்படி மத்திய அரசை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேருந்து கட்டணத்தை மட்டும் முழுமையாக நம்பியிருக்கும் இந்த பேருந்து நடத்துநர்கள் பேருந்துக்கான தவணைப் பணத்தை கட்ட வேண்டிய கட்டாயத்தில்
உள்ளதாக அவர் சொன்னார்.
தனித்து வாழும் தாய்மார்களில் பலரும் இந்த பள்ளி பேருந்து நடத்துநர் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களுக்கான மாதாந்திர தவணைப் பணத்தை செலுத்துவது இவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்றார் அவர்.
இத்தகைய தரப்பினருக்கு உதவும் வகையில் மாதாந்திர தவணைப் பணத்தை செலுத்துவதை ஒத்தி வைப்பது போன்ற திட்டங்களை அமல்படுத்துவது குறித்து நிதியமைச்சு ஆராயலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
பள்ளி பேருந்து நடத்துநர்களுடன் பல முறை சந்திப்புகள் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டிய அவர், அத்தரப்பினரின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவித் திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்தும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.


Pengarang :