EVENTSELANGOR

புதிய இயல்பு முறையில்  இந்த வருட தீபாவளி கொண்டாட்டம்   – சார்ல்ஸ் வாழ்த்து

கிள்ளான் நவ 13:-தீபாவளி வர இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி என்பது ஒரு வண்ணமயமான விழா. தீப ஒளி ஏற்றி கொண்டாடும் இந்த விழா நம் வாழ்வில் இருளை அகற்றி ஒளியை கொண்டுவருவதற்கான அடையாளமாக உலகளாவிய அணைத்து இந்தியார்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்த வருடம் தீபாவளியை நம் வாழ்விலேயே கொண்டாடாத வகையில் புதிய இயல்பு முறையில் நாம் அனைவரும் கொண்டாட உள்ளோம். இதற்கு காரணம் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற கொரோன தொற்று நோய் தான் என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
நம்மில் பலர் தீபாவளியை கொண்டாட பல ஏற்பாடுகளில் இறங்கியிருப்போம். ஆனால், சிலர் இந்த வருடம் தீபாவளியை கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர். கொரோன நோயை பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் விடுத்துள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை பலரின் வருமானத்திற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மனதிற்கு வேதனையாக உள்ளது என வருத்தத்தோடு கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
ஆக, தீபாவளியின் பொருளை உணர்ந்து, இவ்வேளையில் இருள் சூழ்ந்துள்ள குடும்பங்கள், குறிப்பாக வறுமையில் தவிக்கும், வேலை மற்றும் வருமான பிரச்சனையில்  உள்ள குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த வரை ஏதேனும் உதவி வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி வீச உதவி கரம் நீட்டுவோம்.
தீபாவளி பெருநாளை கொண்டாடும் களிப்பில் நாம் அனைவரும் மிக முக்கியமாக  அரசாங்கம் அறிவுறுத்திவரும் SOP எனும் நிலையான இயக்க நடைமுறையை பின்பற்ற ஒரு பொழுதும் மறக்க கூடாது. மக்கள் பாதுகாப்பான குறைந்தது 1 மீட்டர்  தூர சமூக இடைவெளியை கடைபிடிப்பது; அடிக்கடி கைகளை நீர் மற்றும் சோப்பில் கழுவுதல் ; கை தூய்மையை பயன்படுத்துதல்; முக கவசத்தை சரியான முறையில் பயன்படுத்துதல்; அவ்வப்போது சுற்றுச்சூழல் மற்றும் உபயோகிக்கும் பொருட்களை சுத்திகரிப்பு திரவத்தை கொண்டு தூய்மை படுத்துதல்; மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என நினைவுறுத்தினார் சார்ல்ஸ்.
இதன்வழி கொரோனா தொற்று நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் அண்டை அயலார், நம் நண்பர்கள் என அனைவரையும் நம்மால் காப்பாற்ற இயலும் என கூறி புதிய இயல்பு முறையில் இவ்வருட தீபாவளியை நிபந்தனைக்குட்பட்ட மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை பின்பற்றி அனைவரும் இந்த தீபாவளியை சிக்கனமாகவும் சிறப்புடனும் குடும்பத்தாருடன் இன்பமாக கொண்டாட வேண்டும் எனவும் அணைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவுத்துக் கொண்டார் சார்ல்ஸ்.

Pengarang :