ECONOMYNATIONALSELANGOR

அந்நியத் தொழிலாளர்களுக்கு உடனடியாக கோவிட்-19 சோதனை- மந்திரி புசார் உத்தரவு

ஷா ஆலம், டிச 2- மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஏற்ப அந்நியத் தொழிலாளர்களுக்கான கோவிட்-19 சோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாவட்ட பாதுகாப்பு செயல்குழு அல்லது மாவட்ட பேரிடர் நிர்வாக குழு ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட சுகாதார இலாகாவுடன் 
ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தீவிரம் குறைவாக உள்ள கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கும் சிகிச்சைகள் அளிப்பதற்கும் ஏதுவாக நான்கு அல்லது ஐந்து மையங்களை அடையாளம் காணும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கோவிட்-19 மருத்துவமனைகளில் காணப்படும் நோயாளிகளின்  
எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது 
என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுக்கு உள்ள தீவிர அக்கறையை இந்நடவடிக்கை புலப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கூட்டரசு பிரதேசம், பினாங்கு, சபா, லபுவான் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் முதல் தேதி தொடங்கி அந்நியத் தொழிலாளர்களுக்கு 
கோவிட்-19 பரிசோதனை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அண்மையில் கூறியிருந்தார்.

Pengarang :