ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், டிச 2– சிலாங்கூரில் கோவிட்-19  சம்பவங்களின் எண்ணிக்கை அன்றாடம் உயர்வு கண்டு வந்த போதிலும்  அந்த நோய்த் தொற்று இன்னும் கட்டுப்பாட்டிலே உள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் பதிவான சம்பவங்களில் அதிகமானவை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவை என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடுமையாக்கப் பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் வாயிலாக நோய்த் தொற்றினை கட்டுப் படுத்த முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

சிலாங்கூரில் நேற்று 891 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 795 சம்பவங்கள் நடப்பில் உள்ள தொற்று மையங்கள் மூலம் பரவியவையாகும்.டோப் கிளோவ் கையுறை தொழிற்சாலையை உள்ளடக்கிய தெராத்தாய் தொற்று மையத்தில் மட்டும் 778 சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தப்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசு ஆலோசித்து வருவதாக மந்திரி புசார் கடந்த மாதம் கூறியிருந்தார்.


Pengarang :