ECONOMYNATIONALSELANGOR

நாட்டில் ஊழல் கடுமையான பிரச்சனை என 71 விழுக்காட்டு மலேசியர்கள் கருதுகிறார்களா? – பி.ஏ.சி. அதிர்ச்சி

கோலாலம்பூர், டிச 3- அரசாங்கத்தில் ஊழல் ஒரு கடுமையான பிரச்சனையாக உள்ளதாக 71 விழுக்காட்டு மலேசியர்கள் கருதுகின்றனர் என்ற ஜிசிபி எனப்படும் உலக 
ஊழல் அளவீடு அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய அறிக்கையை பி.ஏ.சி. 
எனப்படும் நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு கடுமையாக கருதுகிறது.

அந்த அறிக்கையை டிரான்பரன்ஸி இண்டநேஷனல்(டி.ஐ.) எனப்படும் அனைத்துலக வெளிப்படை போக்கு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும்படி  டி.ஐ. அமைப்பை பொது கணக்கு குழு கேட்டுக் கொள்ளும் என்று அதன் தலைவர் வோங் கா வூ கூறினார்.

மேலும், நாட்டின் பொதுச் சேவைத் துறையில் ஊழலை ஒழிப்பதிலும் உயர் நெறியை மேம்படுத்துவதிலும் ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மேற்கொண்டு வரும் 
நடவடிக்கைகள் குறித்து அதன் தலைமை ஆணையர் விளக்கம் தருவார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அரசு நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்களின் உயர் நெறி மீது மக்களின் 
நம்பிக்கை குறைந்து காணப்படுகிறது என்பதை இந்த புள்ளி விவரம் காட்டடுவதாக 
பி.ஏ.சி. கருதுகிறது.

மக்களின் இந்த நம்பிக்கை குறைவுக்கான காரணத்தை நாம் அடையாளம் காண வேண்டும் என்பதோடு  ஊழலுக்கு எதிரான முயற்சிகளும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக 39 விழுக்காட்டினர் கருதுவதோடு 
அவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு 74 விழுக்காட்டு 
புள்ளிகளை வழங்கியுள்ளனர்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல்வாதிகளை என்று 36 விழுக்காட்டு 
மலேசியர்கள் கருதுகின்றனர். இதர ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 
 இந்த எண்ணிக்கை  20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது.

Pengarang :