Exco Kerajaan Negeri Selangor, Rodziah Ismail bercakap kepada media ketika hadir ke Pameran Perdagangan Antarabangsa (WHOLE 2020) di Pusat Arena SPICE, Pulau Pinang pada 10 September 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYPBTSELANGOR

மூன்று ஆண்டுகளில் 21,094 சிலாங்கூர் கூ வீடுகளை கட்ட மாநில அரசு இலக்கு

ஷா ஆலம், டிச, 3- அடுத்த மூன்று ஆண்டுகளில் 21,094 சிலாங்கூர் கூ வீடுகளை கட்ட மாநில அரசு இலக்கு வகுத்துள்ளது.

கோல லங்காட், சிப்பாங்,காஜாங் ஆகிய பகுதிகளில் 9,606 வீடுகள் தற்போது கட்டப்
பட்டு வருவதாக வீடமைப்பு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா 
இஸ்மாயில் கூறினார்.

மேலும் 6,368 வீடுகளை கட்டும் பணி ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கிள்ளான், சுபாங் ஜெயா, அம்பாங் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இதுதவிர, 5,120 வீடுகளை உள்ளடக்கிய திட்டங்கள் சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர் செலாயாங் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப் 
படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்டு 
இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14,497 சிலாங்கூர் கூ வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 102,996 வீடுகளின் நிர்மாணிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கான 
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

Pengarang :