ECONOMYEVENTSELANGOR

வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் பாகுபாடு காட்டப்படாது- சிலாங்கூர் அரசு உத்தரவாதம்

வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் பாகுபாடு காட்டப்படாது- சிலாங்கூர் அரசு உத்தரவாதம்

ஷா ஆலம், டிச, 1- சிலாங்கூர் அரசின் 2020 வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தின் வாயிலாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் முன்னாள் கைதிகள் உள்பட எந்த தரப்பினருக்கும் மாநில அரசு பாகுபாடு காட்டியதில்லை.

பொருத்தமான வேலைகளை அனைவரும் பெறுவதற்கு ஏதுவாக வாய்ப்புகள் சமநிலையாக வழங்கப்படுகிறது என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

நாம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். ஒருவர் முன்னாள் கைதியா? இல்லையா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஆகவே, இவ்விவகாரத்தில் அந்தஸ்து பார்க்கப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

முன்னாள் கைதிகள் வேலை தேடி நேர்காணலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. சுயகாலில் நிற்கவேண்டும் என்ற அவர்களின் முனைப்புக்கு உரிய தளத்தை ஏற்படுத்தித் தருவது மாநில அரசின் பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இந்த வேலை வாய்ப்பு சந்தை கோல சிலாங்கூர், கோம்பாக், சுங்கை பூலோ, உலு லங்காட் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற வேளையில் ஷா ஆலமில் இம்மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.


Pengarang :