ACTIVITIES AND ADSNATIONALSELANGOR

“கித்தா சிலாங்கூர் “ உதவித் திட்டத்தின் மூலம் வழங்கும்  மதிய உணவு மற்றும் இரவு உணவு உதவிகள்

ஷா ஆலம், ஜனவரி 22:  “கித்தா சிலாங்கூர் “ உதவித் திட்டத்தின் மூலம் வழங்கும்  மதிய உணவு மற்றும் இரவு உணவு உதவிகள் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதில் சிறந்த சேவையை வழங்க நோய் தடுப்புகளில் பணிப்புரியும் முன்னணி ஊழியர்களின் சேவையை, ஆற்றலை மேலும் ஊக்குவிக்கும், ஒரு  வழிமுறையாகும்.

கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் (பி.கே.டி) தலைமை சுகாதார ஆய்வாளர், நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) போது இதுபோன்ற ஊக்குவிப்புகளை வழங்குவதில் மாநில அரசின் அக்கறையால் பெருமைப் படுவதாகவும்,  ஊக்குவிக்கப் படுவதையும் ஒப்புக் கொண்டார்.

“நாட்டில் தொற்றுநோய்த் தாக்கியதிலிருந்து இடைவிடாமல் பணியாற்ற நாங்கள் செய்த தியாகங்களை அங்கீகரித்து மதிப்பளிப்பதை இந்த நன்கொடை நிரூபிக்கிறது.

இது மிகவும் உதவியாக இருக்கும், குறிப்பாக வெளியில் உணவு வாங்குவதற்கான  போதிய நேரம் இன்மையை அடிக்கடி  நாங்கள் எதிர் கொள்கிறோம், ​​குறிப்பாக நண்பகலில்” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது முகமது பெர்ஹான் கட்ரி கூறினார்.

வேலை இடத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் நேரம்  அல்லது நேரத்தை நாள் தோறும் அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சேவை செய்ய பயன்படுத்தலாம் என்றார் அவர். இந்த உதவி திட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளை நிர்வகிக்கும், கூடுதல் சுமையை எளிதாக்குகிறது.

உண்மையில், இங்கு கடமையிலுள்ள,  நடமாட்ட கட்டுப்பாட்டு  விதிமுறைகளை கண்காணித்து வரும்  காவல்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படைகளுக்கும் (ஏடிஎம்) இது உதவுகிறது.

இதற்கிடையில், ஸ்ரீ முடா காவல் நிலைய தலைமை ஆய்வாளர் மொகமாட் பிர்டவூஸ் முகமாட்  கைரி கூறுகையில், சிலாங்கூர் சாலை தடுப்புகளில் பணிப்புரியும்  காவல்துறையினர் (எஸ்.ஜே.ஆர்) மற்றும் சிறப்புப் படைகளின் சேவையை மாநில அரசு  அங்கீகரித்து மதிப்பளிப்பதற்கு ஒப்பாகும்.

சிலாங்கூர் மந்திரி பெசார்  இன்கார்பரேஷன் (எம்பிஐ) மூலம்  வழங்கும் மதிய உணவு மற்றும் இரவு உணவு உதவி கள் “கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன் அதிகாரியாக போலிஸ் படையின் அர்ப்பணிப்பு சேவையை, மாநில அரசு பாராட்டுகிறது என்பதை இது காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை, டத்தோ  மந்திரி பெசார் அமிருதின் ஷரி, மெஸ்ரா ராக்யாட் திட்டத்தின் மூலம் சிறப்பு உதவியை அறிவித்தார்,  “கித்தா சிலாங்கூர் “  திட்டத்தின் மூலம்  மாநிலம் முழுவதும் முன்னணி தொழிலாளர்களுக்கு உணவு உதவியைச் செயல்படுத்த RM3 மில்லியன் ஒதுக்கீடு அறிவித்தார். இந்த முயற்சி 3,500 காவல்துறையினர் மற்றும் ஏடிஎம்கள் உட்பட மருத்துவமனைகள் மற்றும் பி.கே.டி.களில் மொத்தம் 9,822 மருத்துவ பணியாளர்களுக்கு பயனளித்தது


Pengarang :