Press StatementsSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 உதவி நிதித் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர்- மந்திரி புசார் ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்

ஷா ஆலம், ஜன 20- பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் கோவிட்-19  உதவி நிதித் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு மீண்டும் புத்துயிரளிக்கவுள்ளது.

இந்த நிதித் திட்டத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க பெருமனதுடன் முன்வந்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, வர்த்தக ஸ்தாபனங்களும் அரசு சார்பு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பேரிடர் உதவி நிதிக்கு இன்று மட்டும் 23 லட்சம் வெள்ளி நன்கொடையாக கிடைத்தது என்று நமது சிலாங்கூர் சிறப்பு உதவி நிதித் திட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவி நிதித் திட்டத்திற்காக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

மாநில அரசு அமல்படுத்தி வரும் ‘முழுமையான அரசாங்கம் மற்றும் முழுமையான சமுதாயம் அணுகுமுறையின்‘ ஒருபகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்தாண்டில் இந்த உதவித் நிதித் திட்டத்தின் வழி 93 லட்சம் வெள்ளி திரட்டப்பட்டது. அந்த நிதி முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவத் துறை  சார்ந்தவர்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டது.


Pengarang :