PBTSELANGOR

சிலாங்கூரின் 3 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கோவிட்- 19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 8- சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்கள் 100க்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்புப் பணிக்குழு கூறியது.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 193 சம்பவங்களும் உலு லங்காட்டில் 181 சம்பவங்களும் கிள்ளானில் 101 சம்பவங்களும் பதிவானதாக அது தெரிவித்தது.

அதற்கு அடுத்த நிலையில் கோம்பாக்(93), கோல லங்காட்(43), கோல சிலாங்கூர்(37). உலு சிலாங்கூர்(20), சபாக் பெர்ணம்(1) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

சிலாங்கூரில் இதுவரை 37,347 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் அவற்றில் 6,961 சம்பவங்கள் தீவிரத் தன்மையுடன் உள்ளதாக அந்த பணிக்குழு மேலும் கூறியது.

எனினும், சிலாங்கூரில் நேற்று முன்தினம் 965ஆக இருந்த கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 706ஆக குறைந்துள்ளது.

சிலாங்கூரில் மேலும் இரு புதிய தொற்று மையங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. உலு சிலாங்கூரில் டாமாய் பெலாங்கி மற்றம் உலு லங்காட்டில் ஹர்த்தாமாஸ் கட்டுமானப் பகுதி ஆகியவையே அவ்விரு தொற்று மையங்களாகும்.


Pengarang :