SELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 50 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம்

கோலாலம்பூர், 26 ஜன -- 2021-2022ஆம் ஆண்டுக்கான இந்திய கிராமத்து தலைவர் பதவிக்கு முதல் கட்டமாக 50 பேரை சிலாங்கூர் மாநில அரசாங்கம் நியமித்திருக்கிறது.

நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இந்திய கிராமத் தலைவர்கள் 
இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவும் சமுதாய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வுக் காணுவதற்கும் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கணபதிராவ் தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் செயல்திட்டங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான உதவிகளை, மாநில ஆட்சி குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நில அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தினருடன் இணைந்து கால சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆலய நிலப்பிரச்னைகள், தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட இந்திய சமூதாயம் தொடர்பான தகவல்களை இந்திய கிராமத் தலைவர்கள் தங்களிடம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,
 என்றார் அவர்.

சிலாங்கூரில் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய கிராமத் தலைவர்களின் செயல்பாடு, சமுதாயத்திற்கு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்னும் நியமிக்கப்படாத, இந்திய கிராமத் தலைவர்கள் இரண்டாம் கட்ட நியமனத்தில் இடம்பெறுவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :