PENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான இரண்டாம் கட்ட மானியம் – கணபதிராவ் அறிவிப்பு

ஷா ஆலம், ஜன 15- தமிழ்ப்பள்ளிகளுக்கான சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட மானியங்கள் நேரடியாக பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வங்கி காசோலைகளை பள்ளி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கும் முறைக்கு மாற்றாக பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது பள்ளி வாரியத்தின் வங்கிக் கணக்குகளில்  விண்ணப்பங்களுக்கு ஏற்றவாறு சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டிற்கான முதல் கட்ட மானியங்கள் 83 தமிழ்ப்பள்ளிகளுக்கு 43 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதாகவும்  அவர் சொன்னார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட மானியமாக மீதம் நிலுவையில் இருந்த 14 தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கீழே கொடுக்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் இம்முறை எந்ததெந்த பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  1. டோமினியன் தமிழ்ப்பள்ளி – 10,000 வெள்ளி
  2. சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி – 30,000 வெள்ளி
  3. சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி – 30,000 வெள்ளி
  4. காசல்பீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி – 50,000 வெள்ளி
  5. சரஸ்வதி தமிழ்ப்பள்ளி – 50,000 வெள்ளி
  6. கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி – 60,000 வெள்ளி
  7. கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி – 50,000 வெள்ளி
  8. லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி – 50,000 வெள்ளி
  9. செராஸ், பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி – 20,000 வெள்ளி
  10. காஜாங் தமிழ்ப்பள்ளி – 80,000 வெள்ளி
  11. மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி – 10,000 வெள்ளி
  12. சீபோர்ட் தமிழ்ப்பள்ளி – 40,000 வெள்ளி
  13. பிராவுன்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி – 40,000 வெள்ளி
  14. சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி – 20,000 வெள்ளி

Pengarang :