SELANGORYB ACTIVITIES

டத்தோ தெங் ஏற்பாட்டில் பண்டார் பாரு கிள்ளான் தொகுதி மக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம்

கிள்ளான், பண்டார் பாரு   கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஏற்பாட்டில் அத்தொகுதியில் உள்ள வசதி குறைந்தோருக்கு உணவுப்  பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.

அந்த தொகுதியில் உள்ள கட்டுபடி விலையிலான அடுக்குமாடி வீடுகளில் குடியிருக்கும் சுமார் 2,000 குடும்பங்களுக்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தின் சிறப்பு பணிக்குழுவினர் இந்த உதவிப் பொருள்கள் விநியோகித்தனர்.

அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், ரொட்டி, மீகோன், சீனி, சாடின் உள்ளிட்ட பொருள்களை இந்த உணவுப் பொட்டலங்கள் கொண்டிருந்தன.

இந்த உணவுப் பொருள்களை விநியோகம் செய்வதில் தங்களுக்கு பெரும் துணையாக இருந்த பணிக்குழுவினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதலீடு, வர்த்தகம், தொழில்துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான ஆட்சிக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ தெங் கூறினார்.


Pengarang :