ACTIVITIES AND ADSECONOMYPBTSELANGOR

டிரக் சேவையின் மூலம் நடமாடும் சிலாங்கூர் வேளாண் சந்தை

ஷா ஆலம், ஜனவரி 30: இங்குள்ள பங்சாபுரி ரிம்பா ஜயாவில் சிலாங்கூர் வேளாண் சந்தை டிரக் சேவையின் மூலம்  விற்கப்படும் பொருட்கள் மற்றும் விலைகளின் தரம் குறித்துப் பெரும்பாலான பயனீட்டார்கள்  திருப்தி அடைந்துள்ளனர்.

62 வயதான வாடிக்கையாளர் ‘பசர் அதான், புதிய பொருட்களான கோழி, இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளின் விலைகள் சந்தையை விட மலிவானவை என்பது குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது என்கிறார்.

“இத்தகைய ஒரு திட்டத்தின் மூலம்,  சமூகத்தின் சுமையைக் குறைக்கிறது, ஏனென்றால் அவர்கள் பொருட்களை  வாங்குவதற்குக் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியதில்லை என்றார் அவர்.

சிலாங்கூர் வேளாண் மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்) சிலாங்கூர் வேளாண் சந்தை குறித்த  நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் கூட்டாமல், குடியிருப்பாளர்களுக்குத்  தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, இது போன்ற சந்தை வசதியாக இருப்பதால் , தொண்டு பணியிலான இது போன்ற சந்தைகள்  எதிர்காலத்தில்  தொடரும் என்று நம்புகிறேன்  என்றார்.

இதற்கிடையில், 38 வயதான மொகனா சந்திரா, மொபைல் டிரக் சேவை நிறுத்தப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அந்த இடத்திற்குத் தான்,  வந்த போதிலும் கோழி மற்றும் மீன் வாங்க முடிந்தது என்று கூறினார்.

“நான் சற்றுத் தாமதமாக வந்தேன், நிறையப் பொருட்கள் முடிந்துவிட்டன, ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு இன்னும் சில உணவு பொருட்கள் உள்ளன.

“விற்பனையாளர் மிகவும் நியாயமான விலையை வழங்குகிறார், இந்தச் சேவை ஒவ்வொரு வாரமும் இங்கே நடக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த இயக்கம் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் பொதுமக்களுக்குப் புதிய உணவுப் பொருட்களைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் பி.கே.பி.எஸ் சிலாங்கூர் நடமாடும் வேளாண் சந்தை டிரக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

உணவு வாகனங்கள் என்ற கருத்தாக்கத்துடன் விற்பனை திங்கள் கிழமை தவிர ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்குச்  செல்லும்.

 


Pengarang :