ACTIVITIES AND ADSECONOMYNATIONALSELANGOR

தொற்றுநோய் காரணமாக, 56 சட்டமன்றம்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜனவரி 20: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில்  (மெஸ்ரா ரக்யாட் ) சிலாங்கூர் உதவித் திட்டத்தை  மாநில அரசு அறிவித்துள்ளது.  இத் திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கும் (DUN) மொத்தம் RM100  ஆயிரம் வெள்ளி  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே நோக்கத்திற்காக சிலாங்கூர் மாநில எம்.பி.க்களும்  50  ஆயிரம் வெள்ளி  ஒதுக்கப் பட்டுள்ளது  என்று மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“மோசமான தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, 56 மாநில சட்டமன்றம்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிலாங்கூர் மெஸ்ரா ரக்யாட் சிறப்பு ஒதுக்கீட்டை உடனடியாக ஒப்புதல் அளிக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று இன்று  கூறினார்.

அரிசி, சமையல் எண்ணெய், மாவு மற்றும்  உணவு போன்ற அடிப்படை பொருட்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை நேரடியாக செயல்படுத்த முடியும் என்றார்.

வெள்ளி   7 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரம்  ஒதுக்கீடு  கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும் மக்களுக்கான உதவித் திட்டங்கள் உள்ளிட்ட  மாநில பொருளாதார நடவடிக்கைகளை மீட்சியுறச் செய்யவும்  இது  வகை செய்யும்    என  சிலாங்கூர்  மாநில அரசு அறிவித்துள்ளது.

 

 


Pengarang :