CYBERJAYA, 23 Dis — Pengerusi Suruhanjaya Perkhidmatan Air Negara (SPAN) Charles Santiago pada sidang media berhubung penutupan Loji Rawatan Air (LRA) Sungai Semenyih hari ini. Seramai 1.5 juta pengguna terjejas selepas Loji Rawatan Air (LRA) Sungai Semenyih ditutup akibat pencemaran bau dari pembuangan haram sisa kimia. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALSELANGOR

தொற்று நோய் பரவுவதை நிறுத்துவோம் – மனிதகுலத்தை காப்பாற்றுவோம் – தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் – சார்ல்ஸ் சந்தியாகோ வாழ்த்து

கிள்ளான், ஜன 27:- தைப்பூசம் என்பது உலகு வாழ் தமிழர்கள் முருகப் பெருமானுக்கு கொண்டாடும் ஒரு விழா ஆகும். தை மாதம் பூச நட்சத்திரத்தில் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

பழங்காலந் தொட்டே இவ்விழா தமிழர்களால் கொண்டாடப் பட்டு வந்தாலும், பிற மதத்தினரும் இனத்தினரும் இத்தினத்தை விமர்சையாக கொண்டாடுவதை நாம் கண்டுள்ளோம். இத்தினத்தன்று மக்கள் முருகர் ஆலயங்களுக்கு தரிசனம் செய்வது மட்டுமின்றி முருகனுக்கு நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கமாகும். பால் குடம் ஏந்துதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், சிறு ரதம் ஊர்வலம், முடி இரக்குதல் என அன்று முருகர் தலத்தில் மக்கள் அலை கலை கட்டும்.

ஆனால், இவ்வாண்டு நாம் அவ்வாறு கொண்டாட தடையாக உள்ளது மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை 2 .0 மற்றும் அவசர கால பிரகடனம் என்கிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. ஒரு வருடம் காலம் ஆகியும், கட்டுபாட்டுக்குள் வராமல் , மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கவே இவை அமல்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாம் அனைருக்கும் முக்கியமானது இந்த தைப்பூசத் திருநாள் என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் இந்த கட்டுப்பாடு ஆணை அவசியமே. நோய் பரவுவதை நாம் நிறுத்த வேண்டும். மனித குலம் மேலும் மேலும் அழியாமல் இருக்க வேண்டுமாயின் அதை காப்பாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஆகையால், இவ்வருடம் தைப்பூச நாளில் நாம் வீட்டில் இருந்த படியே, பூஜைகளையும் வழிபாடுங்களையும் செய்வோம்.

அரசாங்கம் அறிவித்துள்ள SOP கட்டுப்பாடுகளையும் புதிய இயல்பு முறையையும் கடைபிடிப்போம். மேலும் 1 மீட்டர் சமூக இடைவெளி, முக கவசங்களை முறையாக அணிவது, கைசுத்திகரிப்பான்கள் கொண்டு அடிக்கடி கைகளை கழுவது போன்ற நடைமுறைகளை பின்பற்றுவோம். உலகத்தையே ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கும் இந்த கொரோனா நோய் மிக விரைவில் அழிய வேண்டும் எனவும் நாம் முருக பெருமானிடம் வேண்டிக் கொள்வோம். அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் சார்ல்ஸ்.


Pengarang :