ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIFNATIONALSELANGOR

நாட்டில் அவசரகாலப் பிரகடனம்- பேரரசர் ஒப்புதல்

கோலாலம்பூர், ஜன 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை தடுக்கும் முயற்சியாக வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி வரை அவசர காலத்தைப் பிரகனடப்படுத்த மாட்சிமை தங்கிய பேர ரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட தேதி வரையில் அல்லது கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதை அல்லது குறைக்கப்படுவதை பொறுத்து அதற்கு முன்னதாக ஒரு தேதி வரை அவசர காலத்தைப் பிரகடனப்படுத்த மாமன்னர் உத்தரவிட்டுள்ளார் என்று அரச முத்திரை காப்பாளர் டத்தோ அகமது ஃபாடில் சம்சுடின் கூறினார்.

கோவிட்-19 நிலவரங்களைக் கண்காணிக்க ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய சுயேச்சை குழு ஒன்றை அமைக்கும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கும் பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த அவரசகாலத்தை ஆகஸ்டு முதல் தேதிக்கு முன்னதாகவே மீட்டுக் கொள்வதா? என்பது தொடர்பில் பேரரசருக்கு அந்த குழு பரிந்துரைகளை வழங்கும் என்றார் அவர்.

இந்த அவசரகாலத்தை பிரகடனப்படுத்துவது தொடர்பில் பேரரசர் இதர மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் மாமன்னரைச் சந்தித்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின், கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு பரிந்துரைக்கும் அமைச்சரவையின் முடிவு குறித்து விளக்கினார்.

பிரதமர் தவிர்த்து, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி, சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண், ஆயுதப்படைத் தளபதில் டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா, தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே ஆகியோரும் நாட்டின் நிலவரம் குறித்து பேரரசருக்கு விளக்கமளித்தனர்.


Pengarang :