ECONOMYNATIONALSELANGORTOURISM

நான்காயிரம் டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 25- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் இழந்த  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட  டாக்சி ஓட்டுநர்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ்  உணவுக் கூடைகள் வழங்கப்படும்.

கோவிட்-19 பெருந் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது மாநில அரசாங்கம் பரிவு காட்டுவதை இந்நடவடிக்கை புலப்படுத்துவதாக அகில மலேசிய டாக்சி ஓட்டுநர் கூட்டமைப்பின் தலைவர் கமாருடின் முகமது ஹசான் கூறினார்.

எங்கள் மீது பரிவு கொண்டு இந்த உணவு உதவித் திட்டத்தை அமல்படுத்திய சிலாங்கூர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற உதவிகளை நாங்கள் பெரிதும் எதிர் பார்க்கிறோம் என்றார் அவர்.

சுற்றுலா துறையை பெரிதும் சார்ந்திருக்கும் தங்களின் தொழில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மாநில மக்களுக்கு உதவும் வகையில் உணவுக் கூடை உதவித் திட்டத்தை அமல்படுத்த 13  லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 20 ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்த நிதி பள்ளி பஸ் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், மக்கள் குடியிருப்பு வீடுகளில் வசிப்போர், கே.இ.டி.பி. திடக்கழிவு நிர்வாக துறையில் பணிபுரிவோர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :