ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் தூய்மைக்கேட்டுத் தடுப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஆண்டு இறுதிக்குள் முற்றுப்பெறும்

ஷா ஆலம், ஜன 26- தூய்மைக்கேடு காரணமாக சுத்திகரிக்கப்படாத நீரில் ஏற்படும் மாசுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய ரவாங், சுங்கை கோங் ஆற்று நீர் சுத்திகரிப்புத் திட்டத்தின்  முதல் கட்டப் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 5 விழுக்காட்டை எட்டியுள்ள இத்திட்டம், நீர் சுத்திகரிப்பு குளம் மற்றும்  வெள்ள நீர் சேகரிப்புக் குளத்தை விரிவுபத்தும் பணிகளையும் உள்ளடக்கியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சுமார் 20 கோடி வெள்ளி மதிப்பிலான இத்திட்டம் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சுத்திகரிக்கப்டாத நீர் உத்தரவாதத் திட்டத்தின் முதல் கட்டமாகும் என்று அவர் விளக்கினார்.

சுத்திரிக்கப்படாத நீர் உத்தரவாதத் திட்டத்தின் முதல் கட்டம் முற்றுப் பெற்றவுடன் சிலாங்கூரில் மாசுபாடு காரணமாக நீர் விநியோகம் தடைபடுவதற்குரிய சூழல் ஏற்படாது என்றும் அவர் கூறினார்..

சிலாங்கூர் மற்றும் செமினி ஆறுகளின் வழி மாற்றுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தால் சுங்கை செம்பாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் தரக் கண்காணிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு பூர்த்தியடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :