ACTIVITIES AND ADSNATIONALSELANGOR

நோய்ப் பரவலுக்கு தொழிற்சாலைகள் முக்கிய மையம்

ஷா ஆலம், ஜன 30:-மாநில பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில், நோய் கண்டவர்கள் குறித்த தகவல்களை சிக்மா எனப்படும் பொது சுகாதார ஆய்வக தகவல் முறையிடம் தெரிவிக்கத் தவறும் கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அபராதம் விதிக்கும்.

நோய்ப் பரவலுக்கான முக்கிய மையங்களாக மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் விளங்குவது இந்த கூட்டத்தில் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் பொய்ஸ் எனப்படும் ‘நோய்த் தொற்று உருவாகும் இடத்திலேயே தடுக்கும் திட்டத்தை‘  மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.

தொற்று மையங்கள் உருவாகக்கூடிய மற்றும் பரவக்கூடிய சாத்தியம் உள்ள அனைத்து பணியிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கோவிட்-19 சோதனை மேற்கொள்வது இந்த பொய்ஸ் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் நோய்த் தொற்றின் சங்கிலித் தொடர்பைத் துண்டித்து வேலையிடங்களில் புதிய தொற்று மையங்கள் உருவாக்கம் காண்பதை தடுக்க முடியும். மாநில சுகாதார இலாகா, செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட், ஊராட்சி மன்றங்கள் மற்றும் மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த பொய்ஸ் திட்டம் மேற்கொள்ளப்படும்.

தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களில் புதிய மையங்கள் உருவாவதை தடுக்கும் வகையில் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் நோய்த் தொற்று சம்பவங்களை மறைக்கும் மற்றும் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காண்பதில் ஒத்துழைக்க மறுக்கும் தொழிற்சாலைகளை மூடுவது உள்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்ளும்.

பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக கோவிட் மதிப்பீட்டு மையங்களை (சி.ஏ.சி.) அமைப்பது தொடர்பான பரிந்துரைகள் மீதும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோவிட்-19 நோயாளிகள் தனிமைப்படுத்துவதற்கு அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் மீது ஆய்வு நடத்தி குறிப்பிட்ட பிரிவு அடிப்படையில் வகைப்படுத்தும் பணியை இந்த கோவிட் மதிப்பீட்டு மையம் மேற்கொள்கிறது.

செர்டாங், மேப்ஸ் மையத்தில் அமைந்துள்ள நோய்த் தாக்கம் குறைவாக உள்ளவர்களுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு கூடுதலாக 6,000 கட்டில் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு தீவிர சிகிச்சைப் பிரிவு கூடாரம் மற்றும் மருத்துவ உபகரணங்களும் இங்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார இலாகா இக்கூட்டத்தில் கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்று சங்கிலித் தொடர்பை துண்டிப்பதற்கு ஏதுவாக எஸ்.ஓ.பி. விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் அதே வேளையில் முகக் கவசத்தை எப்போதும் அணிந்திருப்பதோடு கூடல் இடைவெளியை கடைபிடிக்கும்படியும் பொதுமக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

சிலாங்கூர்  மாநில நலன் நமது பொறுப்பு. நமது என்ற உணர்வின் வாயிலாகத்தான் நோய்த் தொற்று பரவலை துண்டிக்க முடியும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அமிடின் ஷாரி

 

 

 

 

 


Pengarang :