ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

பண்டான் இண்டாவிலுள்ள 1,000 குடும்பத்தினர் அடிப்படை உணவுப் பொருட்களை பெற்றனர்

ஷா ஆலம், ஜன 25- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்
பட்ட பண்டான் இண்டா சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஐந்து கிலோ அரிசி மற்றும் இரண்டு கோழிகளை உள்ளடக்கிய இந்த உதவிப் 
பொருள்கள் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த 
வருமானம் பெறும் தரப்பினரின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்று தொகுதி 
சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

காலை 11.00 மணியளவில் தொடங்கிய இந்த உணவுப் பொருள் விநியோக நிகழ்வு 
அமலாக்க அதிகாரிகள் நிர்ணயித்த எஸ்.ஒ.பி. நடைமுறையை பின்பற்றி மாலை வரை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் காலம் வரை வாரந்தோறும் இந்த உணவுப் பொருள் விநியோக நிகழ்வு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்களின் இத்திட்டத்திற்கு உதவி நல்கிய சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் மற்றும் நிறுவனங்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Pengarang :