ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பிற மாவட்டங்களுக்கு இணையாக சபாக் பெர்ணம் வளர்ச்சி காணும்- மந்திரி புசார் உத்தரவாதம்

சபாக் பெர்ணம், ஜன 12- பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் சபாக் பெர்ணம் மாவட்டமும் பிற மாவட்டங்களுக்கு இணையான வளர்ச்சியை அடைவது உறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

விரிவான விவசாய வாய்ப்புகள் மற்றும் தரமான நில மதிப்பு   அடிப்படையில் இந்த மாவட்டத்தை  விவசாய சுற்றுலா மையமாக பிரபலப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.

இப்பகுதி ஈர்ப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும் வர்த்தக ரீதியில் சற்று பின்தங்கியே உள்ளது. ஆகவே, மாநில ஆட்சிக்குழுவினால் உருவாக்கப்படும் சிறப்பு பணிக்குழு இவ்விவகாரம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம் விரைவில் முழுமை பெறவுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதன் அடிப்படையில்  மேம்பாட்டிற்கான முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

 சபாக் பெர்ணம் நில மற்றும் மாவட்ட அலுவலக நாட்டுப்பற்று சதுக்கத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மந்திரி புசாரின் சபாக் பெர்ணம் மாவட்டத்திற்கான வருகையின் ஒரு பகுதியாக இந்த திறப்பு விழா அமைந்தது. 

முன்னதாக அவர், டோரானி பெர்டானா சந்தையைத் திறந்து வைத்ததோடு சபாக் பெர்ணம் மாவட்ட நுலகத்திற்கும் வருகை புரிந்தார்


Pengarang :