ACTIVITIES AND ADSECONOMYPENDIDIKANSELANGOR

மடிக்கணினிக்கான  விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன- புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் தகவல்

 ஷா ஆலம், ஜன 25- வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மடிக்கணினிகளைப் பெற வசதி குறைந்த மாணவர்கள் செய்த விண்ணப்பங்களை புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதி பரிசீலனை செய்து வருகிறது.

ஆரம்ப, இடைநிலை பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களைச்  சேர்ந்த 20 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார். உண்மையில் உதவி தேவைப்படும் வசதி குறைந்த பி40 தரப்பினருக்கு  அவர்களின் தகுதி தொடர்பான ஆய்வின் அடிப்படையில் மடிக்கணினிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.

இந்த மடிக்கணினிகளை வழங்குவதன் மூலம் சம்பந்தபட்ட மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். கணினி போன்ற மின்னியல் உபகரணங்கள் இல்லாமை வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கிராமப் புற மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்குகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்து கல்வி கற்பதை புதிய இயல்பு கட்டாயப்படுத்துகிறது. இந்த புதிய இயல்புக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளவதில் கிராமப்புற மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார் அவர்.


Pengarang :