NATIONALPENDIDIKANSELANGOR

மாணவர்களுக்கு 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 சோதனை- சுபாங் ஜெயா தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், ஜன 17– இம்மாதம் 20ஆம் தேதி மீண்டும் பள்ளிக்குச் செல்லவிருக்கும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பினை சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி வழங்குகிறது.

இந்த சோதனை  நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ள மாணவர்களுக்கு மட்டுமே  மேற்கொள்ளப்படும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ  கூறனார்.

இந்த சலுகை எஸ்.எஸ்.12 முதல் 19 வரையிலான பகுதி, யு.எஸ்.ஜே.1 முதல் 22 வரையிலான பகுதி, பி.ஜே.எஸ்.7,9 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

கியு.எச்.சி மருத்துவ மையத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் ஆண்டிஜென் விரைவு சோதனைக் கருவி (ஆர்.டிகே-ஏஜி) பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

இந்த மருத்துவ சோதனையை மேற்கொள்ள விரும்புவோர் சான்று கடிதம் அல்லது பள்ளியின் அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதுமானது எனக் கூறிய அவர், 012-9120536 என்ற எண்ணில் வாட்சாப் புலனத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இத்தொகுதியில் உள்ள தனியார் உயர்கல்விக்கூட மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.


Pengarang :