NATIONALSELANGOR

மேப்ஸ் தனிமைப்படுத்தும் மையத்திற்கு பிரதமருடன் சிலாங்கூர் மந்திரி புசார் வருகை

ஷா ஆலம், ஜன 19- கோவிட்-19 நோய்த் தாக்கம் குறைவாக உள்ளவர்களுக்கான
தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்திற்கு (பி.கே.ஆர்.சி.) பிரதமர் டான்ஸ்ரீ
மொகிடின் யாசினுடன் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருன் ஷாரி உடன்
வந்தார்.
செர்டாங் மலேசிய விவசாய பல்கலைக்கழக கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்)
அமைந்துள்ள அந்த மையத்திற்கு பிரதமர் மாலை 5.00 மணியளவில்
வந்தடைந்தார்.
அந்த மையத்தில் சுமார் ஒரு மணி நேரத்தை செலவிட்ட அவர், அவர் அங்கு
நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு கோவிட்-19
நோயாளிகளையும் சந்தித்தார்.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா, சிலாங்கூர் மாநில சுகாதார
இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் ஆகியோரும் பிரதமரின் இந்த
வருகையின் போது உடனிருந்தனர்.
குறைவான நோய்த் தாக்கம் கொண்டவர்களுக்கான இந்த பி.கே.ஆர்.சி. சிகிச்சை
மையத்தில் 9,000 கட்டில்கள் உள்ளன.


Pengarang :