ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

விவசாய பொருள் உற்பத்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு முறை- சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், ஜன 28– விவசாய பொருள் உற்பத்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக விவசாய நிலங்கள் மீதான கண்காணிப்பு முறையை அமல்படுத்தும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒரே மாதிரியான காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுவதன் காரணமாக சந்தையில் அப்பொருள் தேவைக்கு அதிகமாக இருக்கும் நிலையைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த கண்காணிப்பு முறையை அமல் செய்வதன் மூலம் முக்கியத்துவம் தரப்படாத பயிர்கள் அடையாளம் காணப்பட்டு அப்பயிர்களின் பயிரீட்டுக்கு முக்கியத்துவம் தரும்படி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

இதற்கு, மிளகாய் உற்பத்தியை உதாரணம் காட்டிய இஷாம், இந்த உணவுப் பொருளுக்கு அதிக கிராக்கி இருக்கும் நிலையில் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறினார்.

விவசாய பொருள் பயிரீடு தொடர்பான தரவுகள்  நம்மிடம் இல்லாத பட்சத்தில் அனைவரும் மிளகாயை அதிகமாக பயிரிட்டு அதன் காரணமாக அந்த விளைபொருளின் விலை வீழ்ச்சியடையும் சூழல் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

உரப்பாசனம் போன்ற நவீன தொழில்நுட்ப விவசாயத்தை பயன்படுத்துவதற்குரிய சாத்தியம் குறித்தும் மாநில அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்துறையில் ஈடுபட அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் எனினும் தொழிலைத் தொடக்குவதற்கு மூலதனமே அவர்களின் முக்கிய தேவையாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

 

 

 


Pengarang :