25 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் 75 பேருக்கு நில உரிமைக் கடிதம்

ரவாங், ஜன 15- தாமான் பெரிண்டுஸ்திரியான் கிரேட்இயர் கெப்பிட்டல் பகுதியில் தொடக்கத்தில் நிலம் வாங்கிய 72 பேர்  25 வருடங்கள் காத்திருந்தப் பின்னர் நில உரிமைக் கடிதத்தைப் பெற்றனர்.

மொத்தம் 105 லோட் நிலங்களை உள்ளடக்கிய அப்பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட 50 விழுக்காடு குறைவான பிரீமியத் தொகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

நில மேம்பாட்டாளர் திவாலானது மற்றும் நிலத்தை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்படாதது ஆகிய காரணங்களால் 1996ஆம் ஆண்டு முதல் அந்த தொழில்பேட்டைப் பகுதியில் நிலம் வாங்கியவர்கள் பிரச்னையை எதிர்நோக்கி வந்ததாக அவர் சொன்னார்.

பிரீமியத் தொகை செலுத்துவது தொடர்பான விண்ணப்பத்தை மேம்பாட்டாளர் செய்திருந்த போதிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப் படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக நில அனுமதிக் கடிதம் மற்றும் பாரம் 5ஏ வழங்கும் நிகழ்வு இங்குள்ள பெங்குளு அலுவலகத்தில் நடைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிலத்தை வாங்கியவர்கள் வாகனத்திலிருந்தவாறு தங்கள் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த ஐம்பது விழுக்காட்டு பிரீமியத் தொகைக்கான  கழிவு சலுகை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனக் கூறிய அவர், பிரீமியத் தொகையை விரைந்து செலுத்தி நிலப்பட்டாவைப் பெற்றுக் கொள்ளும்படி நில உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :