ACTIVITIES AND ADSSELANGOR

இலவச கோவிட் -19 நோய்த்தொற்று பரி சோதனை குடும்ப செலவுகளை குறைக்க பெரும் உதவி

ஷா ஆலம், பிப் 17:ஷா ஆலம் செக்சன் 19 இல் மாநில அரசு இன்று மேற்கொண்ட இலவச கோவிட் -19 நோய்த்தொற்று பரி சோதனைக்கு வந்த சையத் மொக்தார் சையத் அசார்  வயது 40, அவர் தனது மனைவியையும் இன்னும் கல்விப் பயிலும் இரண்டு குழந்தைகளையும் கூட்டி வந்திருந்தார்.  அவர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இத்திட்டம் பெரும் உதவியாகவும் குடும்ப செலவுகளை குறைக்க உதவுகிறது என்றார்.

இலவச கோவிட் -19 நோய்த்தொற்று பரி சோதனை தன்னைப் போன்ற குடும்பத் தலைவரின் சுமையை எளிதாக்கும் என கிராப் வாகன டிரைவராக பணிபுரியும் அவர் மகிழ்ச்சியுடன்  தெரிவித்தார்.

“கிராப் டிரைவராக பணிபுரிவதால், ஒவ்வொரு நாளும் உள்ளூர் அல்லது வெளிநாட்டினர்  என பொருட்படுத்தாமல் பல்வேறு வாடிக்கையாளர்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் எனது குடும்பத்தினரைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லும்போது, ​​என் இதயம் கவலையடைகிறது, ஒருவேளை நான் வைரஸையும் சுமந்திருக்கலாம்.

“இத்தகைய இலவச பரிசோதனையை  வழங்குவதற்கு டத்தோ மந்திரி புசார், டத்தோ’ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தபோது, ​​தான் உடனடியாக அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வந்து நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.

இதற்கிடையில், 32 வயதான தாய், நூர் அஸ்ரிடா மொஹமட் ஷாரி, சமீபத்தில் கோவிட் -19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தபோது கவலைப்பட்டார்.

தனது மூன்று இளம் மகன்களுடன் வசிப்பவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட கூடும் என்ற அச்சத்துடன் இருந்தார்.

தான் ஒரு தனியார் கிளினிக்கில் சோதனையை மேற்கொண்டால், நிச்சயமாக செலவு RM200 அல்லது அதற்கு மேல் இருக்கும், நான் எல்லா குழந்தைகளையும் அழைத்து வந்தால், அதற்கு RM1,000 க்கும் அதிகமாக செலவாகும்.

“ஆனால் மாநில அரசு வழங்கும் இலவச பரிசோதனையால், எங்கள் குடும்பம் பெருமூச்சு விடுகிறது,  இதனால் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் பிற தேவைகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.

“இது இலவசம் என்பதால், எனது குடும்பமும் நானும் மாநில அரசு வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து வறிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவும் என்று நம்புகிறோம், ” என்றார்.

சிலாங்கூர் அரசாங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் நோய்த்தொற்று அதிகமுள்ள பல  இடங்களில் பெரிய அளவிலான கோவிட் -19 நோய்த்தொற்று சோதனையை மேற் கொண்டு வருகிறது .


Pengarang :