ECONOMYPBTSELANGORTOURISM

கோவிட்-19 பாதிப்பு- மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த அரசு கடப்பாடு

ஷா ஆலம், பிப் 23-  கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதில் சிலாங்கூர் அரசு கடப்பாடு கொண்டுள்ளது.

நோய்க்கு பிந்தைய வாழ்க்கைக்கு தயார் படுத்திக் கொள்வதற்குரிய நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தன்மானமிக்க பொருளாதாரத்தை உருவாக்குவதில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தீவிர கவனம் செலுத்துகிறது. இதன் வழி, வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறோம் என்றார் அவர்.

வசதி குறைந்தவர்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் உதவும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மந்திரி புசார் அலுவலகத்தால் வெளியிட்ட கோவிட்-19 தொடர்பான சிறப்புப் பதிப்புக்குஅவர் வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறினர்.

திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக தொழில் திறன் மறுபயிற்சி திட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்டத்தின் வாயிலாக பொருத்தமான வேலைகளை தேடித் தருவது போன்ற திட்டங்களையும் மாநில அரசு அமல்படுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் இ- பாசார் ராயா திட்டத்தின் வாயிலாக மாநில மக்களிடையே வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். 3,000 வர்த்தகர்களை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் 6,000 பேர் பங்கு கொண்டனர் என்றார் அவர்.


 


Pengarang :