NATIONALSELANGOR

சிலாங்கூர் தடுப்பூசித் திட்டம்- நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை

ஷா ஆலம், பிப் 24– சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 தடுப்பூசியை முதல் கட்டமாக பெறும் தரப்பினரில் நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட தொழிலாளர்களும் இடம் பெறுவர் என சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

வேலையிடங்களில் நோய்த் தொற்று அதிகமாக பரவுவதற்கு காரணமாக விளங்கும் அந்நியத் தொழிலாளர்களும் இந்த முதல் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் இடம் பெறுவர் என அவர் சொன்னார்.

எனினும்,  அந்நியத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படுவதற்கு தேவையான தடுப்பூசிகளை முதலாளிகள் மாநில அரசிடமிருந்து வாங்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

சிலாங்கூரில் சுமார் ஐந்து லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை நாம் கவனிக்காமல் போனால் நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். ஆகவே தங்கள் தொழிலாளர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை முதலாளிகள் மாநில அரசிடமிருந்து வாங்க வேண்டும் என்றார் அவர்.

இங்கு நடைபெற்ற கிருமி நாசினி உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 67 லட்சம் மக்கள் தொகையில் குறைந்த து 70 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னணி தொழில்துறை மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதால் இங்கு தொழிற்சாலைகளும் கட்டுமானப் பகுதிகளும் அதிகமாக காணப்படுகின்றன. இதனால், கோவிட்-19 தொற்று மையங்கள் அதிகளவில் தோன்றுகின்றன என்றார் அவர்.

 


Pengarang :