ACTIVITIES AND ADSECONOMYYB ACTIVITIES

தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கு – 2,000 உணவுக் கூடைகள்

கோல லங்காட், பிப் 21– கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இலக்காக கொண்டு சுமார் இரண்டாயிரம் உணவுக் கூடைகளை விநியோகம் செய்ய தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றத் தொகுதி திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கு உதவுவதற்காக மாநில அரசு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அத்தொகுதி உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

தங்கள் பகுயில் வசிக்கும் வசதி குறைந்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவாக அந்த தொகை கிராமத் தலைவர்கள் மற்றும் கிராம சமூக நிர்வாக மன்ற பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுவரை 50 பேருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய கூடைகள் கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும் என அவர் சொன்னார்.

 

 


Pengarang :