ECONOMYNATIONAL

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசு உயர்வு- டீசல் விலையில் மாற்றமில்லை

கோலாலம்பூர், பிப் 26– ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு ஐந்து காசு உயர்வு கண்டுள்ளது. எனினும், டீசல் விலையில் மாற்றமில்லை.

இம்மாதம் 27ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு வெ.2.05 விலையிலும் ரோன்97 லிட்டருக்கு வெ.2.35 விலையிலும் விற்கப்படும் என்றும் டீசல் லிட்டருக்கு வெ.2.15 என்ற விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

பெட்ரோலியப் பொருள்களின் வாராந்திர விலை நிர்ணய அடிப்படையில் இந்த புதிய விலை நிர்ணயிக்கப்படுவதாக  அது தெரிவித்தது.

உலகச் சந்தையில் பெட்ரோல் விலையேற்றத்தின்  தாக்கத்திலிருந்து பயனீட்டாளர்களைக் காக்கும் வகையில் ரோன்95 பெட்ரோலுக்கான விலையை லிட்டருக்கு வெ. 2.05 ஆகவும் டீசல் விலையை வெ 2.15 ஆகவும் உச்சவரம்பு விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. ஏ.பி.எம். எனப்படும் தானியங்கி விலை நிர்ணய செயல்முறையின்படி பார்த்தால் ரோன்95 மற்றும் டீசலுக்கான உச்சவரம்பு விலையை விட  பத்து காசு அதிகமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Pengarang :