ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசியை சுகாதார அமைச்சு மட்டுமே விநியோகிக்கும்

கோலாலம்பூர், மே 6- கோவிட்-19 தடுப்பூசியை சுகாதார அமைச்சு மட்டுமே விநியோகிக்கும். சுகாதார அமைச்சு தவிர்த்து இதர வகைகளில் அந்த தடுப்பூசிகள் விற்கப்படுவதாக அல்லது விநியோகிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை.

சந்தைகளில் விற்பனையில் உள்ளதாக கூறப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டதாக, போலியானதாக அல்லது அங்கீகரிக்கப்படாத தரப்பிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

மருந்துகளை வாங்கும் போது அதன் உறையில்  ‘Mal‘ என்ற எழுத்துக்களும் ‘Pharmatag‘ என்ற உத்தரவாத சான்றும் உள்ளதை பயனீட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட மருந்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அதன் பதிவு எண் மற்றும் குறியீட்டு எண்களை www.pharmacy.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாக சரிபார்த்துக் கொள்வதும் அவசியமாகும் என்று அது தெரிவித்தது.

தடுப்பூசி பெறுவதற்கு தங்களுக்கான வரிசை வரும்வரை  காத்திரும்படி பொதுமக்களை சுகாதார அமைச்சு வலியுறுத்தியது. தடுப்பூசியைப் பெறுவதற்கு ஏதுவாக மைசெஜாத்ரா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி அது கேட்டுக் கொண்டது.

ஷோப்பி இணைய விற்பனைத் தளத்தின் வாயிலாக கோவிட்-19 பைசர் தடுப்பூசி விற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. எனினும் இத்தகவலை மறுத்த அந்த இணைய விற்பனை நிறுவனம் அது பொய்யானத் தகவல் என்றும் கூறியது.


Pengarang :