NATIONALSELANGOR

 சிலாங்கூரில் நேற்று வரை 12,336 பேர் கோவிட்-19 தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம்,  மார்ச் 8- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை சிலாங்கூரில் 12,336 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 பேருக்கு இதுவரை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு கூறியது.

தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கையில் சரவா மாநிலம் முன்னிலை வகிப்பதாக கூறிய அக்குழு, அம்மாநிலத்தில் 22,140 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர் எனக் கூறியது. அதனை அடுத்து பகாங்கில் 14,473 பேரும் கிளந்தானில் 11,927 பேரும் சபாவில் 11,739 பேரும் கோலாலம்பூரில் 11,267 பேரும் ஜொகூரில் 10,719 பேரும் பேராக்கில் 10,678 பேரும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், திரங்கானுவில் 6,932 பேருக்கும் கெடாவில் 6,269 பேருக்கும் பினாங்கில் 5,292 பேருக்கும் நெகிரி செம்பிலானில் 4,864 பேருக்கும் மலாக்காவில் 4,321 பேருக்கும் புத்ரா ஜெயாவில் 2,290 பேருக்கும் லபுவானில் 2,259 பேருக்கும் பெர்லிசில் 2,223 பேருக்கும் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலம் முதல் கட்டமாக 68,677 கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாகவும் அவை  முன்களப் பணியாளர்களுக்கு மூன்று கட்டங்களாக  செலுத்தப்படும் என்றும் சிலாங்கூர் மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :