NATIONALPress StatementsSELANGOR

தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மீது அழுத்தம் !

ஷா ஆலம், மார்ச் 23: நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி தாவ மிரட்டியதாக கூறப்படும் மூத்த அமைச்சரின் செயலை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது பற்பல வகைகளில் அழுத்தம் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

“ஊழல் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்வது ஒரு மிக முக்கியமான பிரச்சினை, ஏனென்றால் இந்த தேசத்தின் ஏற்ற தாழ்வுகளை இது தீர்மானிக்கும், அதை எதிர்ப்பதில் நமது உறுதியும் அர்ப்பணிப்பும் அளப்பறியது என்றார் அவர்.

“ஊழல் வழக்குகளை பயமோ, பாரபட்சமோ இன்றி விசாரிக்கும் திறனும்  துணிவும் அந்த ஆணையத்துக்கு இருப்பது அவசியம், அதன் வழியே அது சுதந்திரமான  நம்பிக்கைக்குறிய ஒரு ஆணையமாக (MACC  க்கு) உருவெடுக்க முடியும்’’ என்று அவர் பேஸ்புக்கில் எழுதினார்.

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான  தமது கவலைகளை தெரிவிப்பதற்கும் குரல் கொடுப்பதற்கும் நேற்று அன்வர் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டத்தோ மொஹமட் அசாம் பாக்கியுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

முன்னதாக தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம்   அதற்கான ஆதரவைத் திரட்ட குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்  ஆதரவை பெற அவர்களை மிரட்டி  அடிபணிய வைப்பதற்கான  முயற்சிப்பதாகக் கூறினார்.

இந்த அறிக்கை கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் தொடர்பானது,  அவர் மார்ச் 13 அன்று கட்சியை விட்டு வெளியேறி பிஎன் அரசாங்கத்தை ஆதரித்தார்


Pengarang :