NATIONALPENDIDIKANSELANGOR

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒட்டி மதிப்பாய்வு செய்ய மந்திரி புசார் வருகை.

கோம்பாக், மார்ச் 2;-  நேற்று தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை மதிப்பாய்வு செய்ய டத்தோ மந்திரி புசார் செகோலா கெபாங்சன் (எஸ்.கே) கோம்பாக் செத்தியாவுக்கு வருகையளித்தார்.

நேற்று முதல் நாடு முழுவதிலும் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆரம்ப பள்ளிகளில் முதலாம் மற்றும் இரண்டாம்  வகுப்புகள் தொடங்கி பின்னர் மார்ச் 8 முதல் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலும், இடைநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி ஜொகூர், கெடா, கிளாந்தன் மற்றும் திராங்கானு ஆகிய மாநிலங்களிலும், ஏனைய மாநிலங்களில் அதன் மறுநாளும் பள்ளி அமர்வுகளைத் தொடங்கும்.

நேற்று மதியம் 12.30 மணிக்கு வந்த மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, வருகையாளர்கள் பாதைவழியாக பள்ளி சதுக்கத்திற்குச் சென்றார்.

அங்கு, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, அவர்கள் வகுப்புகளுக்குள் நுழைவதற்கு முன்பு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவரிகள் மற்றும் கிருமிநாசினிகளைக் கொண்ட சிறப்பு பைகளை மாணவர்களுக்கு விநியோகிக்க 15 நிமிடங்கள் செலவிட்டார்.

இந்த விஜயத்தின் போது, ​​கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் இன்னும் உள்ளதால், மாணவர்களும் ஆசிரியர்களும் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை விதி முறைமைகளுக்கு (எஸ்ஓபி) இணங்கவும் சுய பாதுகாப்பைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப் பட்டது.

அதிக எண்ணிக்கையை தவிர்க்க பள்ளிகள் 20 முதல் 30 விழுக்காடு மாணவர்களுடன் செயல்பட பாலர் பள்ளி மற்றும் ஒன்றாம் இரண்டாம் வகுப்புகள் மட்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

அதுவும் பள்ளி இரண்டு அமர்வுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது, அதாவது பாலர் பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கு மாலை, என்று செயல்படுவதாக அவர் கூறினார்.


Pengarang :