NATIONALSELANGOR

மார்ச் 3ஆம் தேதி வரை 4,276 பேர் சிலாங்கூரில் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 5– தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இம்மாதம் 3ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 4,276 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

நாடு முழுவதும் இதுவரை 80,336 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சரவா  மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 13,691 பேர் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் கோலாலம்பூரில் 8,505 பேருக்கும் பேராக்கில் 7,757 பேருக்கும் கிளந்தானில் 7,725 பேருக்கும் பகாங்கில் 7,415 பேருக்கும் ஜொகூரில் 6,454 பேருக்கும் திரங்கானுவில் 4,566 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த நிலையில்  கெடா (2,388 பேர்),  நெகிரி செம்பிலான் (3,101 பேர்), பினாங்கு (2,914 பேர்), மலாக்கா (2,752 பேர்), சபா (1,898 பேர்), லபுவான் (1,789), பெர்லிஸ், (1,598 பேர்), புத்ரா ஜெயா (1,507 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சிலாங்கூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 68,677 முன்களப் பணியாளர்கள்  தடுப்பூசிகளைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :