ECONOMYNATIONALSELANGOR

வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட இலவச பரிசோதனையில் 39 பேருக்கு நோய்த் தொற்று கண்டு பிடிப்பு

ஷா ஆலம், மார்ச் 2- கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனைகளில் 39 பேர் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

பூச்சோங், கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் மேற்கொள்ளப்பட்ட அந்த இலவச பரிசோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து  பயன்பெற்றதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு வெவ்வேறு இடங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் 1,283 பேர் பங்கு கொண்டனர் என்றார் அவர்.

இச்சோதனை இயக்கத்தின் போது 39 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக தனது   வாயிலாக அவர் தெரிவித்தார்.

கம்போங் ஸ்ரீ லங்காஸ், தாமான் டாலியா, தாமான் பூச்சோ பெர்டானா, பூச்சோங் பெர்மாத்தா 2 மற்றும் கம்போங் ஸ்ரீ அண்டாலஸ் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு தாமான் பூச்சோங் இண்டாவிலுள்ள சுபாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதே தினத்தில் கோலக்கிள்ளான், பண்டமார் இண்டா 2 மற்று ஷா ஆலம் செக்சன் 28 ஆகிய இடங்களிலும் இலவச கோவிட்-19 சோதனை நடத்தப்பட்டது.


Pengarang :