ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை 5.32 கோடி பேர் பயன்படுத்தினர்

ஷா ஆலம்,  மார்ச் 2– கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி தொடக்கப்பட்ட ஸ்மாட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை இதுவரை 5 கோடியே 32 பேர் பயன்டுத்தியுள்ளனர்.

சிலாங்கூர் மாநில அரசின் இந்த இலவச பஸ் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 12 ஊராட்சி மன்றங்களில் 136 பஸ்கள் 43 தடங்களில் இலவச சேவையை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய பிரஜைகளுக்கு இந்த ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தின் வழி தொடர்ந்து இலவச சேவை வழங்கப்படும். எனினும், அந்நிய நாட்டினருக்கு கட்டணமாக 90 காசு வசூலிக்கப்படும். இந்த நடைமுறை இம்மாதம் 15ஆம் தேதி அமலுக்கு வருகிறது என்றார் அவர்.

இங்குள்ள மெனாரா பேங்க் சிம்பானான் நேஷனல் முனையத்தில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையின் ‘ஸ்கேன் டு ரைட்‘ எனும் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பஸ் சேவையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் கருத்துக்களை பொறுத்தே சேவையின் தரத்தை உயர்த்துவது மற்றும் தடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :