ECONOMYNATIONAL

இன்று 2,148 சம்பவங்கள் பதிவு-தொடர்ந்து ஏற்றம் காணும் கோவிட்-19 தொற்றுகள்

புத்ரா ஜெயா, ஏப் 15– மலேசியாவில் இன்று  2,148 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின, நாட்டில் அந்நோய்த் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த  எண்ணிக்கை காட்டுகிறது.

ஆகக் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி இரண்டாயிரத்திற்கும் அதிகமான கோவிட்-19 சம்பவங்கள் நாட்டில் பதிவாகின. அன்றைய தினம் 2,154 பேர் அந்நோயினால் பீடிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 367,977 பேர் இதுவரை அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

நோய் அதிகம் பரவிய மாநிலங்களில்  சரவா முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். அம்மாநிலத்தில் 512 பேரும் அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூரும் (459 பேர்) உள்ளதாக அவர் டிவிட்டர் வழி தெரிவித்தார்.

.கிளந்தான் (221), சபா(202), ஜோகூர் (182), கோலாலம்பூர் (171), பினாங்கு (134),திரங்கானு (57), மலாக்கா (53), பேராக் (51), நெகிரி செம்பிலான் (34),பகாங், 34), கெடா (26), புத்ரா ஜெயா (8), லபுவான் (3),பெர்லிஸ் (1,) ஆகியவை  முறையே அடுத்தடுத்த  நிலையில் உள்ளன.


Pengarang :