ANTARABANGSANATIONAL

குடிநுழைவு வருகை அனுமதி காலாவதியானவர்கள்  சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

புத்ரா ஜெயா, ஏப் 22- குடி நுழைவு வருகை அனுமதி (சோஷியல் விசிட் பாஸ்) காலாவதியானவர்கள் தங்கள் தாயகம் திரும்பும் வரை இங்கு தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு சிறப்பு அனுமதிக்கு இன்று தொடங்கி விண்ணப்பிக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் சைமி டாவுட் கூறினார்.

சம்பந்தப்பட்ட து தரகத்தின் சான்றுக் கடிதம், இங்கு தங்கியிருக்கும் காலத்தில் செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதி ஆதாரம் மற்றும் வசிப்பிடம் ஆகிய விபரங்களையும் அந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

இணையம் வாயிலாக செய்யப்பட்ட வருகைக்கான முன்பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக குடிநுடிழைவு அலுவலகம் வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்நியப் பிரஜைகள் தங்கள் விண்ணப்பம் தேவையான ஆவணங்களுடன் முழுமையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதோடு தங்கள் வருகையை இணையம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

குடிநுழைவு வருகை அனுமதி காலாவதியானவர்கள் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை கடந்த 12ஆம் தேதி எச்சரித்திருந்தது.

 


Pengarang :