ECONOMYMEDIA STATEMENTSELANGOR

குழாய் பழுதுபார்ப்பு பணிகளுக்காக கோம்பாக், கோலாலம்பூரில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், ஏப் 5– கிளாங் கேட்ஸ் நீர்த்தேக்கத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத நீரை சுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டுச் செல்லும் குழாய்களின் வால்வுகளை மாற்றும் பணியை ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு மேற்கொள்ளவுள்ளது.

இதன் காரணமாக வங்சா மாஜூ மற்றும் புக்கிட் நானாஸ் நீர் சுத்திகரிப்பு மையங்களில் நீர்  சுத்திகரிப்புப் பணிகள் நிறுத்தப்படும் என்ற அந்நிறுவனம் கூறியது.

கோலாலம்பூர் மற்றும் கோம்பாக் வட்டாரத்திலுள் 58 இடங்களில் நாளை காலை 9.00 மணி முதல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அதிகாலை 5.00 மணி வரை அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும் என அது தெரிவித்தது.

இந்த நீர் விநியோகத் தடையை கருத்தில் கொண்டு போதுமான அளவு நீரை சேகரித்து வைக்கும்படி பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பயனீட்டாளர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

நீர் விநியோகத் தடை தொடர்பான மேல் விபரங்களை பொதுமக்கள் https://www.airselangor.com/scheduled-water-supply-distruption-notice/ எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :