ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோம்பாஸ்  திட்டத்தின் வழி வெற்றிகரமான தொழில் முனைவோரை உருவாக்க  ஹிஜிரா நடவடிக்கை

ஷா ஆலம், ஏப் 20- தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கு உதவுவதில் கோம்பாஸ் எனப்படும் தொழில் முனைவோர் திசைகாட்டி திட்டத்தை சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியம் இலக்காக கொண்டுள்ளது.

தாங்கள் ஈடுபட்டுள்ள துறையில் உள்ள வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் இலக்கை அறிந்தவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுவது அவசியமாகும் என்று ஹிஜ்ரா சிலாங்கூர் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுபார்டி முகமது நோர் கூறினார்.

தொழில்முனைவோர் ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் எல்லா திசைகளை நோக்கியும் நகரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கோம்பஸ் திட்டத்தை தாம் அமல்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

ஹிஜ்ரா திட்டத்தில் பெற்ற கடன் வீணடிக்கப்படக்கூடாது. மாறாக, அந்த கடனுதவியின் வாயிலாக அவர்கள் மேம்பாடு காண வேண்டும். அவர்கள் புதிய வாய்ப்புகளை கண்டறியக்கூடியவர்களாக இருக்க வேண்டும். கடனைப் பெற்று அதனை முறையாக நிர்வகிக்க இயலாதவர்களாக உள்ளதைக் காண நான் விரும்பவில்லை என்றார் அவர்.

ஹிஜ்ரா அறவாரியம் வெறும் கடன் வழங்கும் அமைப்பாக மட்டும் அல்லாமல் வெற்றிகரமான தொழில்முனைவோரை உருவாக்கும் தளமாகவும் விளங்குவதை உறுதி செய்ய புதிய பிரதிரூப மாற்றத்தை இந்த நிறுவனத்தில் ஏற்படுத்துவதில் தாம் முனைப்பு காட்டவுள்ளதாக கடந்த வாரம் புதிதாக பொறுப்பேற்ற அவர் சொன்னார்.


Pengarang :