ECONOMYSELANGOR

செந்தோசா தொகுதியின் முயற்சியில் தடுப்பூசித் திட்டத்திற்கு 200 பேர் பதிவு

கிள்ளான், ஏப் 19- சொந்தோசா சட்ட மன்றத் தொகுதி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மக்கள் சந்திப்பு பயணத் திட்டங்களின் வாயிலாக அத்தொகுதியிலுள்ள 200 பேர் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பதிந்து கொண்டுள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் விவேக தொலைபேசியைக் கொண்டிராதவர்களை தடுப்பூசித் திட்டத்தில் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டதாக தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்த பதிவு நடவடிக்கையில் பங்கு கொண்டவர்களில் பெரும்பாலோர் முதியவர்கள் எனக் கூறிய அவர், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதில்  குடியிருப்பாளர் சங்கங்களும் தங்களுக்கு பெரிதும் துணை புரிவதாகச் சொன்னார்.

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சினார் இல்மு ஹராப்பான் சிலாங்கூர்‘ திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களில் பலர் தடுப்பூசியைப் பெற இன்னும் அஞ்சுவதால்  தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிரசார நடவடிக்கைகளை தாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய நோய்த் தொற்று அலை உருவாகும் சாத்தியம் உள்ளதால் அதனைத் தடுப்பதற்கு தடுப்பூசி நமக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது. 14 மாதங்கள் கடந்த பின்னரும் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. நடப்புச் சூழலை மாற்றியமைப்பதற்கு தடுப்பூசி மிகவும் இன்றியமையாதாக  விளங்குகிறது என்றார் அவர்.


Pengarang :