MEDIA STATEMENTSELANGORWANITA & KEBAJIKAN

நோன்பு காலத்தில் இரத்த வங்கியின்  நடவடிக்கை நேரம் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஏப் 12- முஸ்லீம்கள் நோன்பு துறைந்தப் பின்னர் இரத்த தானம் செய்வதற்கு ஏதுவாக  தேசிய இரத்த வங்கியின் நடவடிக்கை நேரம் நீட்டிக்கப்படவுள்ளது.

தலைநகர், ஜாலான் துன்ரசாக்கில் உள்ள இரத்த வங்கி திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை காலை மணி 7.30 முதல் இரவு 9.00 மணி வரையிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  காலை 8.00 முதல் மாலை 4.00 மணி வரையிலும் செயல்படும் என்று தேசிய இரத்த வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

மெகா மாலில் உள்ள இரத்த சேகரிப்பு மையம் நோன்பு காலத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

புத்ரா ஜெயா, பிரிசிண்ட் 10 இல் உள்ள இரத்த சேகரிப்பு மையம் சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் வியாழன் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் செயல்படும்

இரத்தக் கையிருப்பு போதுமான அளவு உள்ளதை உறுதி செய்யும் வகையில் நோன்பு மாதத்தில்  முஸ்லீம் அல்லாதோர் அதிகளவில் இரத்த தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :