MEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

நோன்பு மாதத்தில் வருமான வாரிய முகப்பிடங்கள்  30 நிமிடங்கள் முன்னதாக மூடப்படும்

கோலாலம்பூர், ஏப் 13– நோன்பு மாதத்தில்  வருமான வரி வாரியத்தின் அனைத்து முகப்பிடங்களும்  30 நிமிடங்கள் முன்னதாக மூடப்படும்.

ஜொகூர், கெடா, திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் லபுவான் நீங்கலாக இதர அனைத்து மாநிலங்களிலும் சேவை முகப்பிடங்கள் திங்கள் தொடங்கி வெள்ளி வரை காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை  திறந்திருக்கும் என்று  வருமான வரி வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

ஜொகூர், கெடா, திரங்கானு, கிளந்தானில் ஞாயிறு முதல் புதன் வரை காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் வியாழக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையிலும் முகப்பிடங்கள் செயல்படும் என்று அது தெரிவித்தது.

சபா மற்றும் லபுவானில் உள்ள முகப்பிடங்கள் காலை 8.00 மணி வரை மாலை 4.00 வரை திறந்திருக்கும்.

வருமான வரி அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் தவிர்த்து  மற்றவர்கள் அந்த வாரியத்துடனான பணிகளை இணையம் வாயிலாக மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி வாடிக்கையாளர்களை அவ்வாரியம் கேட்டுக் கொண்டது.

 

 


Pengarang :