ECONOMYNATIONAL

நோய் எதிர்ப்பு போராட்ட வெற்றிக்கு பி.ஏ.சி மட்டுமின்றி நாடாளுமன்ற கூட்டமும் அவசியம்

ஷா ஆலம், 22 ஏப்ரல்: தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை ஆதரிப்பதை நோக்கி நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கூட்டம் மட்டுமின்றி  நாடாளுமன்றக் கூட்டங்களும் தொடர வேண்டும்.

சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்ப்பு குழுக்கள் பலவாராக கருத்துகளை முன் வைத்ததைத்  தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பதில்களை அளிக்க நாடாளுமன்றக் கூட்டங்களும் , விவாதங்களும் அவசியமாவதாகப் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தடுப்பூசி ஆக்கத்தன்மை உத்தரவாதச் சிறப்புக் குழுவுடன் (ஜே.கே.ஜே.வி) பி.ஏ.சி அமர்வின் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தைக் குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரினை மீண்டும் தொடர வழி வகுக்க வேண்டும்.

டேவான் ராக்யாட் மக்களின் தேவைகளை விவாதிக்க, உரிமைகளைப் பாதுகாப்பதற்கான, ஒரு முக்கிய விவாத மேடை, அதை வாய் சண்டை, வீண் வாக்குவாதமிடும் இடமாக மட்டும் கருதிவிடக்கூடாது  என்று நூருல் இசா அன்வர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதன் வழி கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளை விட்டு, தடுப்பூசியின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதிலும், அடுத்த ஆண்டுக்குள் நோய் எதிர்ப்பு செயற்குழு அதன் இலக்குகளை அடைவதிலும், அரசாங்கத்துடன் எல்லாக் கட்சிகள் மற்றும் சமூகமும் முழு ஈடுபாட்டுடன் செயல் பட வழிவகுக்கும் மூலோபாயமாகும் என்றார் அவர்.

கடந்த ஜனவரி 5 ம் தேதி ஜே.கே.ஜே.வி மாநாட்டில் கலந்து கொண்ட பிஏசி உறுப்பினர்கள் தடுப்பூசி கொள்முதல் செயல்முறை, விலை மற்றும் விநியோக அட்டவணை குறித்த விளக்கத்தில் திருப்தி அடைந்ததாக நூருல் இசா தெரிவித்தார்.

இந்தக் கோவிட் 19 தொற்று நோயின் தாக்கம் மலேசியாவின் சுகாதார அமைச்சின் சேவை, சமூகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இன்று அரசியல் மற்றும் கட்சி வேறுபாடின்றி, நாடு எதிர்நோக்கும் பெரிய சவாலிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதும், குறைந்தது 80 விழுக்காட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதை உறுதி செய்வதும் நமது கடமையாகும். இன்றைய இக்கட்டிலிருந்து இந் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க  நாட்டுக்கு தலைவர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய தொண்டாகும்.

ஒரு மாபெரும் சவாலை எதிர்கொள்ள மக்களை ஒன்றிணைத்து இட்டுச் செல்லத் தேவை படும் வழித்தடம் ஜனநாயகம் என்பதை நாம் அறிவோம். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடக்கி, ஜனநாயகத்தை முடமாக்கி நோய் எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றிபெறக் கனவு காணக்கூடாது என்றார் அவர்.

 

 


Pengarang :