ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

புயலால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மந்திரி புசார் பார்வையிட்டார்

அம்பாங் ஜெயா, ஏப் 29– கடும் புயல் காரணமாக கூரைகள் சேதமடைந்த தாமான் கிராமாட், பி.கே.என்.எஸ். ஏயு2 குடியிருப்பின் இ புளோக் பகுதியை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட அந்த குடியிருப்பின் நான்காவது மாடியைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினரையும் அவர் சென்று கண்டார்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக அந்த ஐந்து குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் வெள்ளியை மந்திரி புசார் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பழுதுபார்க்க 50,000 வெள்ளி முதல் 60,000 வெள்ளி வரை செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், நோன்ப் பெருநாளுக்கு முன்னதாக அந்த வீடுகளைச் சரிசெய்யும்படி தாம் பி.கே.என்.எஸ். நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொன்னார்.

நேற்று பிற்பகல்  1.45 மணியளவில் ஏற்பட்ட கடும் புயலில் பிளாட் கொலம்பியா என அழைக்கப்படும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கூரைகள் கடும் சோதத்திற்குள்ளாயின.


Pengarang :